dysarthria

நாக்குழறல், பேச்சுக் குறைபாடு, பேச்சுக்குளறல்

தமிழ் விளக்கம்

ஒரு மொழியின் அடித்தளம் சொல்லொலிகள் என்ற ஒலியன்கள் ஆகும். மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியன் என்பது, குறிப்பிட்ட ஒரு ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும். சொற்களும், உருபன்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக் காரணமாயிருப்பன ஒலியன்களே ஆகும். ஒரு சொல்லிலுள்ள ஒரு ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும். பேச்சு உருவாக இயங்கக்கூடிய தசைகளும், நரம்புகளும் சரியாகச் செயல்படாதபோது சொல்லொலிகளை சரியாக உச்சரிக்க முடியாத போது நாக்குழறல் ஏற்படும்.

English

Speech and articulation problems caused by disturbances of muscular control.