dysentery

சீதபேதி; இரத்தக்கழிச்சல், வயிற்று உளைச்சல், வயிற்றுக்கடுப்பு

தமிழ் விளக்கம்

இரத்தக்கழிச்சல் அல்லது சீதபேதி (Dysentery அல்லது Bloodyflux) உடலின் குடல் பகுதியில், முக்கியமாகப் பெருங்குடலில் ஏற்படும் ஓர் அழற்சி நோயாகும். இதனால் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் மலத்தில் சளி மற்றும் / அல்லது குருதியுடன் கூடிய கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். இவை வயிற்றுப்பகுதிகளில் உள்ள பெருங்குடலில் சீரற்ற நிலையையும், பெரும் வேதனைகளையும் கொடுக்கக்கூடியது. சாதாரண பேதியானது வயிற்றில் ஏற்படும் வேறு சில அழற்சிகளால் கூட வரும். ஆனால் சீதபேதி இருவேறு நோய் தொற்றுக் காரணிகளால் வருகிறது. ஒன்று - பாக்டீரியா இனத்தைச் சேர்ந்த சிகல்லா டிசண்ட்ரியே என்பதாகும். வேறு காரணி எண்டமீபா இச்டோலிடிகா என்ற அமீபாவாகும். இவைகளைக்கொண்டு பாசில்லரி டிசண்ட்ரி என்றும் அமீபிக் டிசண்ட்ரி எனவும் விவரிக்கிறோம். இவை பரவுவதற்கு சுத்தமற்ற பழக்க வழக்கங்களே காரணமாகிறது.

English

An intestinal disease whose symptoms include inflammation, pain, and diarrhea. The disease is caused by bacteria or viruses and is most commonly transmitted by contact with water or food that has been contaminated by human waste.