dyslexia
கற்றல் குறைபாடு, சொற்பொருள் காணவியலாத மூளைக் கோளாறால் படிப்பிலும் எழுத்துக் கூட்டலிலும் ஏற்படுகிற பேரிடர்
தமிழ் விளக்கம்
எழுத்து மயக்கம், புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (Dyslexia, டிஸ்லெக்சியா) என்பது மொழியோடு சம்பந்தப்பட்ட ஊனம் ஆகும். டிஸ்லெக்சியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் தெளிவற்ற பேச்சு. டிஸ்லெக்சியா எழுத்து, பிழைகள் மற்றும் வாசிப்புத் திறனின்மை ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு படித்துப் புரியாமை நிலையாகும். இது நரம்பு மண்டலத் தொடர்பல்லாத பிற குறைபாடுகளான பார்வையின்மை, காது கேளாமை ஆகியவற்றினாலோ அல்லது போதிய அளவு வாசிக்கக் கற்பித்தலின்மையாலோ உருவாகும். இது வாசிப்புத் திறனின்மையிலிருந்து வேறுபட்டதாகவும், தனித்தன்மையுடையதாகவும் காணப்படுகிறது. மூளையானது எழுத்து மற்றும் பேச்சு மொழியைக் கையாளும் விதத்தில் ஏற்படும் முரண்பாடுகளிலிருந்தே புரிந்தும் படிக்க இயலாமை ஏற்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
English
An impairment of reading and writing skills, often with the tendency to reverse letters or words while reading or writing them or not noticing certain letters or words.