dyspnea
மூச்சு விடுதலில் இடர்ப்பாடு
தமிழ் விளக்கம்
உணர்வுடன் கூடிய மூச்சிறைப்பு / மூச்சுத்திணறல். கடினமான உடலுழைப்பிற்குப் பின் மூச்சுத் திணறல் இயல்பானது. சாதாரண நிலையில் ஏற்படும் மூச்சுத் திணறலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆஸ்துமா, நிமோனியா, இதயத்திற்குப் போதுமான இரத்தம் கிடைக்காமை (cardiac ischemia), நுரையீரல் நோய்கள், இதயச் செயல்திறன் குறைபாடு, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு அல்லது உளவியல் ரீதியான காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். காரணங்களைப் பொறுத்தே சிகிச்சை முறைகள் அமைகிறது.
English
Breathing difficulty.