earmarked taxes
குறிப்பிட்ட காரியத்திற்காக வசூலிக்கப்படும் வரி, குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கிவைக்கப்படும் வரி
தமிழ் விளக்கம்
பொதுமக்களிடமிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வசூலிக்கப்படும் வரி. உதாரணமாகத் தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூலிக்கும் வீட்டு வரியில், குறிப்பிட்ட சதவீதம் நூலகத் தீர்வையாக வசூலிக்கப்பட்டு, அது நூலக ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது அதேபோல் தனிநபர் வருமான வரியில் கூடுதலாக வசூலிக்கப்படும் கல்வித் தீர்வை கல்வி வளர்ச்சிக்காகவும், பெட்ரோலியப் பொருட்கள் மீதும், வாகன வரிகளிலும் கூடுதலாக வசூலிக்கப்படும் தீர்வை சாலை மேம்பாட்டிற்காககவும் செலவிடப்படுகிறது.
English
Income, whose purpose has been designated in advance, received by a government body from citizens and corporations. For example, gasoline sales taxes are largely designated for highway maintenance and construction, and a payroll tax is often earmarked for unemployment compensation.