Earth Day
புவி நாள். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 22, 1970 லிருந்து அனுசரிக்கப்படும் சர்வதேச தினம்(Earth Day).
தமிழ் விளக்கம்
Earth Day என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாட்டில், உலக அமைதிக்காக குரல்கொடுத்த ஜான் மெக்கானெல் (John McConnell), 'மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமல் காக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடவேண்டும்' என்று கருத்துத் தெரிவித்தார். இப்படித்தான் புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில், அமெரிக்காவின் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவரும் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது. அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
English
An annual observance by people in many nations to celebrate the natural environment and to raise the public consciousness through parades, teach-ins, demonstrations, and intensified lobbying activities about the need to protect and conserve the environment. Social workers have been among the leaders of the movement since its initial celebration on April 22, 1970.