echolalia
சொல்லெதிரொலிப்பு, சொல்வதைச் சொல்லல், பிறர் சொன்ன சொற்களை அப்படியே பின்பற்றிச் சொல்லுதல்
தமிழ் விளக்கம்
பெரியவர்கள் பேசுவது மாதிரியே பேசி, மொழி மற்றும் உச்சரிப்பைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முறை. குழந்தைகள் பேசத்தொடங்கும் 9 மாதத்திலிருந்து 12 மாதம் வரை, இப்படிச் செய்வார்கள். அதற்குமேலும் அதிக காலம் நீடித்தால் அவர்களின் பேச்சாற்றலில் குறைபாடு இருப்பதாகப் பொருள். வயதானவர்களிடம் இப்பழக்கம் தென்படுமாயின் அது உளச்சிதைவு நோய்க்கான அறிகுறியாகும்.
English
Repetitive imitation of the speech of another. This is a normal phase of language development in the nine- to 12-month-old infant. Later, it is seen as maladaptive. It is often seen in adults with certain types of schizophrenia.