echopraxia

பிறர் செயல்களை அதே போல் பின்பற்றிச் செய்தல், செய்தனச் செய்தல் பிறழ்வு, செய்தனச் செய்தல் இயலாமை, செயலெதிர்ச்செயல்

தமிழ் விளக்கம்

பிறர் செயல்களை அதே போல் பின்பற்றிச் செய்தல். இது அனிச்சையாக உணர்வின்றி நடக்கும் எதிரதிர்வு (reaction) இயக்கமாகும். இது தசை இழைகளின் அனிச்சை இயக்கத்தாலோ (tic) அல்லது முக வாதத்தாலோ ஏற்படும் கோளாறாகும். இது ஆட்டிசக் கோளாறு, மனச்சிதைவு, உணர்விழப்புடன் கூடிய சித்தப்பிரமை (catatonia), பேச்சிழப்பு (aphasia), கொச்சை மொழிப் பேச்சு, உரத்த பேச்சு போன்ற கோளாறுகளின் அறிகுறியாகும். மேலும் மூளையின் முன்மடல் பாதிப்பிற்குள்ளானாலோ, வலிப்பினாலோ, முதுமையில் வரும் ஞாபக மறதியாலோ, நோய்த் தடுப்பாற்றல் குறைவினாலோ கூட இக்குறைபாடு தோன்றலாம்.

English

Repetitive imitation of the movements or behavior of others, often a symptom of schizophrenia or other mental disorder.