ecological overstress

சுற்றுச் சூழலின் தாங்கு திறனைவிட அதிகமாகப் பயன்படுத்தல்

தமிழ் விளக்கம்

சுற்றுச்சூழல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளமுடியாதபடி அதிகமாகப் பயன் படுத்தி, அதன் உற்பத்தித் திறனைக் குறைப்பது அல்லது ஆக்க வளமற்றதாக்குவது. அதிகப் பயன்பாட்டினால் வரும் இத்தகைய ஆக்கக்கேடுகள் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், மிகையான மேய்ச்சலாலும், காடுகளை அழிப்பதாலும், காற்று மற்றும் தண்ணீரை மாசுபடுத்துவதாலும், மண் அரிப்பினாலும் ஏற்படுகிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள், ஆப்பிரிக்காவின் சகாராப் பாலைவனப் பகுதிகளிலும், இந்தியத் துணைக்கண்டத்தின் வெள்ளப்பெருக்கு சமவெளிகளிலும், தென் அமெரிக்காவின் மழைக்காடுகளிலும் நடைபெறுகிறது.

English

The application of more demands on an environment than it can meet, ultimately reducing its restorative functions and making it permanently unproductive or less productive. This phenomenon is notable in sub-Saharan Africa, the flood plains of the Indian subcontinent, and the areas adjacent to the South American rain forest. It is the consequence of the combined effects of population growth, overgrazing, deforestation, air and water pollution, and soil erosion.