ecological perspective

சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம்

தமிழ் விளக்கம்

சுற்றுச் சூழல் பற்றிய பார்வை சமூகப்பணியின் ஒரு முக்கிய சார்புநிலையாகும். இது மனிதர்களையும் அவர்களைச் சுற்றியுள்ள சூழலையும், இரண்டிற்குமிடையே ஏற்படும் தொடர்புகளையும், ஒன்றின் மீது பிறிதொன்று ஏற்படுத்தும் தாக்கங்களையும் புரிந்துகொள்ள வலியுறுத்துகின்றது. இது மனிதர்களுக்கும் சூழலுக்கும் இடையேயான ஒத்திசைவு, பரிமாற்றம், ஏற்றெதிர்மை (சரி எதிரீட்டுமுறை reciprocity), அன்னியோன்னியம் (பரஸ்பரம்) போன்ற கருத்தாக்கங்களைக் கொண்ட கருத்துநிலை. சமூகப்பணியாளர்கள் பெரும்பாலும் தனியொன்றையும் (நபர், குழு, குடும்பம்,சமுதாயம்) அதன் சூழலையும் புரிந்துகொண்டே தங்களின் தீர்வு முறைகளைப் பரிந்துரைப்பர்.

English

An orientation in social work and other professions that emphasizes understanding people and their environment and the nature of their transactions. Important concepts include adaptation, transactions, goodness of fit between people and their environments, reciprocity, and mutuality. In professional interventions, the unit of attention is considered to be the interface between the individual (or group, family, or community) and the relevant environment. See also life model.