ecomap

ஒரு தனிநபரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் (மனிதர்கள் மற்றும் அமைப்புகள்) காட்டும் வரைகலை

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்களும், குடும்பச் சிகிச்சையாளர்களும் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள், சகமனிதர்களிடம், சமுதாய அமைப்புகளிடம் மற்றும் சுற்றுப்புறத்திடம் கொண்டிருக்கும் பரஸ்பர மற்றும் எற்றெதிர்மைத் தொடர்புகளையும் (mutual & reciprocal), அதன் தாக்கங்களையும் வரைபடமாக்கும் முறை இது. இம்முறையை சமூகப்பணியில் பிரபலப்படுத்தியவர் ஆன் ஹர்ட்மன் என்ற சமூகப்பணிக்கல்வியாளர்.

English

A diagram of family relationships created by Ann Hartman and used by social workers, family therapists, and other professionals to depict a variety of reciprocal influences between the client and those people related to the client, relevant social institutions, and environmental influences.