Economic Opportunity Act of 1964

பொருளாதார வாய்ப்பு சட்டம்

தமிழ் விளக்கம்

லின்டன் பி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த போது கொண்டுவரப்பட்ட சட்டம். இச்சட்டத்தின்படி பொருளாதார வாய்ப்பிற்கான அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டு, அதன் மூலம் மேன்மைமிக்க சமுதாயம் (GreatSociety) அமைக்கப் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. வறுமைக்கு எதிரான யுத்தம் (War on Poverty), அமெரிக்காவிற்கான தொண்டர்கள் (Volunteers in Service to America (VISTA), ஆற்றலோடு தொடங்குதல் (Head Start), வேலைவாய்ப்பிற்கான தனித்துறை, குடியிருப்புகளுக்கான தொண்டரணி, சமுதாயச் செயல்திட்டம் போன்று பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

English

The major legislation (P.L. 88-452) of President Lyndon B. Johnson's War on Poverty. Enacted in 1964, it established the Office of Economic Opportunity (OEO) and helped create such programs as Volunteers in Service to America (VISTA), the Job Corps, Head Start, Upward Bound, the Neighborhood Youth Corps, and the Community Action Program (CAP). Many of these programs were subsequently dismantled.