ECOSOC
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்
தமிழ் விளக்கம்
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC), ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு முதன்மை உறுப்புகளில் (1.ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை 3. ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை 4. ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் 5 .ஐக்கிய நாடுகள் செயலகம் 6. அனைத்துலக நீதிமன்றம்) ஒன்றாகும். ஐநாவின் 14 சிறப்பு நிறுவனங்கள், செயலாக்க ஆணயங்கள் (1: உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), 2 சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO), 3. விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி (IFAD), 4 சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), 5 சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), 6 சர்வதேச நாணய நிதியம் (IMF), 7 சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU), 8 ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO), 9 ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு(UNIDO), 10 உலக அஞ்சல் ஒன்றியம்(UPU), 11 உலக வங்கி குழு, புனரமைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்தி வங்கி (IBRD), சர்வதேச நிதி கழகம் (IFC), சர்வதேச அபிவிருத்தி சங்கம் (IDA), 12 உலக சுகாதார அமைப்பு (WHO), 13 உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO), 14 உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (WMO), 15 உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) மற்றும் அதன் ஐந்து மண்டல ஆணையங்களின் பொருளாதார, சமூகத் தொடர்பான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். இந்த சபையில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை ஜூலையில் நான்கு வாரங்கள் கூடுகிறது. உலகப் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும் ஐநா அமைப்பிலுள்ள சார்பு நிறுவனங்களுக்கும் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் நோக்கமாகும். 1998 முதல் ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் முக்கியக் குழுக்களின் தலைமையேற்கும் நிதி அமைச்சர்களும் இங்கு கூடுகிறார்கள்.
English
See United Nations Economic and Social Council (ECOSOC).