ecstasy

பரவசமூட்டி, மெய்மயக்கி

தமிழ் விளக்கம்

மெத்தாம்பெடாமைன் (methamphetamine) என்ற மருந்தையும், பிரமையூட்டும் (hallucinogenic) இரசாயனங்களையும் கலந்து மெத்தைலினி டியாக்ஸி மெத்தாம்பெடாமைன் (methylenedioxymethamphetamine) என்றழைக்கப்படும் MDMA என்ற கலவையைத்தான் எக்டஸீ என்கிறார்கள். இது தடைசெய்யப்பட்ட போதை மருந்து. இரவு விடுதிகளில் பரவச நிலையை அடையப் பயன்படுத்தப்படும் போதை மருந்தாக எக்டசியை பயன்படுத்துகிறார்கள். இந்த மன்ற மருந்தை (club drug) எடுத்துக்கொள்ளும் போது, கூடிப்பழகுவதில் உள்ள கூச்சத்தைப் போக்கி, தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் தனது நண்பர்களே என்ற பிரமையைக் கொடுக்கும். ஆனால் இது மோசமான பின் விளைவுகளை உண்டாக்க வல்லது.

English

Street name for an illicit designer drug that combines methamphetamine and hallucinogenic chemicals to make a compound called “MDMA.” The combination of a stimulant and hallucinogen has a powerful effect with many negative side effects.