ECT

மின்தூண்டல் வலிப்பு / மின் வலிப்பு சிகிச்சை, மின் அதிர்ச்சி சிகிச்சை, electroshock therapy (EST)

தமிழ் விளக்கம்

மின்தூண்டல் சிகிச்சை (மின் அதிர்ச்சி சிகிச்சை) என்பது மின்பட்டைகளைக் கொண்டு, மூளையில் அதிர்வு உண்டாக்கி அதன்மூலம் வலிப்பை வரவழைத்து, மனநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் முறை. மின் அதிர்வு சிகிச்சையினால், தேவையற்ற, கெட்ட நினைவுகளை அழித்து, மன அதிர்ச்சி, மன நோய், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நோயின் தன்மை பொறுத்து நோயாளிக்குப் பலமுறை மின்தூண்டல் அளிக்க வேண்டிவரலாம். இந்தச் சிகிச்சை முறை இத்தாலிய உளநரம்பியல் மருத்துவர்களான யுகோ செலெட்டி மற்றும் லூசியோ பினி என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

English

Electroconvulsive therapy. See electroshock therapy (EST).