ectopic pregnancy
இடம்மாறிய கர்ப்பம், வழக்கமான இடத்துக்கு வெளியே கர்ப்பந்தரித்தல், கருப்பைக்கு பதிலாக கருமுட்டை செல்லும் பாதையில் கருவுற்ற முட்டை வளரல்
தமிழ் விளக்கம்
கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்தலை இடம்மாறிய கர்ப்பம் எனக் கூறலாம். இந்நிலை நூற்றில் ஒரு (1:100) கர்ப்பத்தில் உண்டாகலாம். சாதாரணமாகக் கருவுற்ற முட்டை ஆறு அல்லது ஏழு நாட்களில் சூலகத்திலிருந்து கர்ப்பப்பையின் குழாயினூடாக கர்ப்பபையைச் சென்றடையும். இடம்மாறிய கர்ப்ப நிலையில் கருவுற்ற முட்டை கர்ப்பப்பைக் குழாயில் தங்கி விடுவதால் கர்ப்பப்பையைச் சென்றடைவதில்லை. இந்நிலை கர்ப்பபையின் குழாயில்தான் பொதுவாக உண்டாகின்றது. சிலநேரங்களில் கர்ப்பபைக்கு வெளியே கர்ப்பப்பைக் குழாயைத்தவிர வேறு இடங்களிலும் கர்ப்பம் உண்டாகலாம். இடம்மாறிய கர்ப்ப நிலையினால் நோயாளியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்நிலையை கண்டு பிடித்து சிகிட்சை அளிக்காவிட்டால் கர்ப்பப்பைக் குழாய் வெடித்து உடலுக்குள் இரத்தக்கசிவு எற்பட்டு நோயாளி மயக்கமடையலாம். சிலவேளைகளில் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இடம் மாறிய கர்ப்பம் சரியான வனர்ச்சியை அடைவதில்லை. இடம்மாறிய கர்ப்ப நிலைகள் ஏற்படக் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. பாலியல் உறவினூடாகப் பரவும் தொற்றுதோய்கள் கர்ப்பப்பைக் குழாய்களைப் பாதித்து குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது குழாய்கள் சுருங்கியிருக்கலாம். இதற்கான முக்கிய காரணம் கிலமீடியா எனும் உடலுறவு மூலம் பரவும் கிருமியால் ஏற்படும் தொற்று நோயால் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
English
Pregnancy in which the fertilized egg develops outside the uterus, usually in the fallopian tubes.