edema

திரவக் கோர்வை, உடலில் நீர் கோர்த்தல்

தமிழ் விளக்கம்

உடலிலுள்ள திசுக்களிலும் வெற்றிடங்களிலும் திரவம் / நீர் சேர்ந்து வீக்கமுண்டாதல். இதய, சிறுநீரக நோய்களாலும், நிமோனியா மற்றும் பிற தொற்று வியாதிகளாலும் இந்த அறிகுறிகள் தோன்றலாம் உ..ம் சத்துணவுக் குறைநீர்க் கட்டு, செயற்கை நீர் வீக்கம், மழலை நீர்க் கட்டு, ஈரல் செயலிழப்பு நீர்க் கட்டு, நோக்க இயலா நீர்க் கட்டு, சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு, அழுந்தும் நீர்க் கட்டு, புரதக் குறைநீர் வீக்கம், சீழ் நீர்க் கட்டு என்று நீர்க்கட்டுகளில் பலவகையுண்டு.

English

Accumulation of fluid in the body tissues and cavities leading to swelling. Edema may be a symptom of a variety of disorders, including heart failure, kidney disease, pneumonia, and infection.