Education for All Handicapped Children Act
ஊனமுற்ற குழந்தைகளுக்கான கல்விச் சட்டம்
தமிழ் விளக்கம்
கற்றல் மற்றும் பிற குறைபாடுள்ள குழந்தைகள் பொதுப் பாடசாலைகளில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிக்கவும், அவ்வாறு படிக்கும்போது அவர்களின் பிரத்யேகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் சட்டம். இதன்படி மாற்றுபாயக் கல்வி (remedial classes - கிரகிக்கும் ஆற்றல் குறைந்தவர்களுக்கான அபிவிருத்திக் கல்வி), ஆலோசனை கூறல் மற்றும் பிரத்யேகப் போதனை (tutoring) போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றது.
English
The federal law (P.L. 94-142) enacted in 1975 that distributes funds for public schools so that they may provide equal educational opportunities and free special services for all children with learning and other disabilities. Such services may include special testing, remedial lessons, counseling, and tutoring.