Educational Legislative Action Network (ELAN)

சட்டச் செயல்பாட்டிற்கான கல்விக் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

சமூக நலன் தொடர்பான சட்டங்களையும், சமூகப்பணி தொழில் மீது அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் கவனமாகப் பரிசீலித்து, அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் தொடங்கிய முயற்சி. சட்ட முன்னுரிமைகளைப் பற்றிய, சமூகப்பணியாளர்களின் நிலைப்பாட்டை, கருத்துக்களை செய்தி மடல்கள், மின்னஞ்சல்கள், அலுவலகக் கூட்டங்கள். கருத்தரங்குகள், மாநாடுகள் போன்ற செயல்களின் மூலம் தேசிய மற்றும் மாநில அளவில் பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், சமூக நலனில் அக்கறைகொண்ட பிற நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தி, சட்டத்தில் திருத்தங்களையும் மாற்றங்களையும் கொண்டுவர ஆதரவு திரட்டும் செயல்பாடு.

English

A program within the National Association of Social Workers (NASW) that was established in 1971 to coordinate efforts to inform national and state legislators about issues of concern to social workers. NASW chapters have continued to use the term ELAN to refer to their legislative networks. See also legislative advocacy and legislative advocacy tactics.