educator role

கல்வியாளர் பங்கு, கற்பிக்கும் பொறுப்பு

தமிழ் விளக்கம்

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்களை மாற்றிக்கொள்ள (பிரச்சனை மற்றும் சூழலுக்கு ஏற்ப) கற்றுக்கொடுப்பது சமூகப்பணியாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று. இந்தப் பொறுப்பை, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்களை அவர்களுக்குப் புரியும்படி தந்துதவியும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகளையும் அதன் சாத்தியக்கூறுகளையும் பரிந்துரைத்தும், பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட முன்னுதாரணங்களை எடுத்துரைத்தும், பிரச்னை மீதான அவர்களின் கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்தவும் செய்ய முயல்வர். இது தவிர அனுசரணையாளராகவும் (facilitator), எதையும் இயலுமையாக்குபவராகவும் (enabler), உதவிகளை ஒருங்கிணைப்பவராகவும் சமூகப்பணியாளர் கடமையாற்ற வேண்டும்.

English

In social work, the responsibility to teach clients necessary adaptive skills. This is done by providing relevant information in a way that is understandable to the client, offering advice and suggestions, identifying alternatives and their probable consequences, modeling behaviors, teaching problem-solving techniques, and clarifying perceptions. Other social work roles are identified as the facilitator role, the enabler role, and the mobilizer role.