EEOC
சம வேலைவாய்ப்பிற்கான ஆணையம்
தமிழ் விளக்கம்
சம வேலைவாய்ப்பிற்கான ஆணையமென்பது பணியிடப் பாகுபாடுகளை அகற்றக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனம். இனம், நிறம், பூர்வீகம், மதம், வயது, இயலாமை, பாலினம், மரபணுகூறுகளைக் காரணம் காட்டி செய்யப்படும் பாகுபாடுகள் பற்றி செய்யப்படும் புகார்கள் பற்றி விசாரிக்க இந்த ஆணையம் அதிகாரம் கொண்டது. பாகுபாடு பற்றி புகார் செய்பவர்கள், அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களின் மீது பழிவாங்கும் நடத்தைகள் பற்றிய புகார்களையும் இந்த ஆணையம் விசாரிக்கும். ஓரினச் சேர்க்கையாளர், தன்பாலின சேர்க்கையாளர், இருபால் இச்சையாளர் மீது காட்டப்படும் பாகுபாட்டையும், திருநங்கைகளின் பாலின அடையாளத்தை அங்கீகரித்தும் இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பாகுபாடு பற்றிய ஆயிரக்கணக்கான புகார்களை மத்தியஸ்தம் செய்து வைத்து, பிரச்சனனைகளைச் சுமுகமாகக் கையாண்டுள்ளது. பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்குத் தொடரவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
English
See Equal Employment Opportunity Commission (EEOC).