ego

அகம், சுயம், தான் என்னும் எண்ணம், தன்முனைப்பு, நனவு மனம்

தமிழ் விளக்கம்

உடலின் தேவைகளையும், சுற்றுப்புற எதார்த்தத்தையும் சமன் செய்யும் மனதின் பகுதி. இது அறிவாற்றல், புலனுணர்வு, நினைவுத் திறன், இயக்கு தசைகளின் மீது கட்டுப்பாடு, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள் என்று பலவற்றை உள்ளடக்கியது. ஒரு மனிதனின் நடத்தையை வழிநடத்தும் ஆளுமையே சுயம் அல்லது தன்முனைப்பு (ego) என்கிறோம். மனத்தின் கட்டமைப்பை விளக்க சிக்மண்ட் பிராய்ட் கையாண்ட மூன்று உளச் செயற்பாடுகளில் (1. அது / ஆழ்மனம்/ நனவிலி மனம் / உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind), உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id) 2. அகம் / சுயம் / தன்முனைப்பு / உணர்வு மனம் (Conscious Mind), முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), 3.Superego அதியகம் / தொலை நோக்கு மனம் / மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego) ஈகோவும் ஒன்று. இந்த மூன்று பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று இடையூட்டாடுவதை வைத்து மனித மனதின் செயல்களை விளக்க பிராய்ட் முயற்சித்தார். பிராய்ட் விளக்கிய மன கட்டமைப்பின்படி, 'அது' அல்லது 'ஆழ்மனம்' என்பது ஒருங்கிணைக்கப்படாத உள நிகழ்வுகளின் போக்காகவும், 'அகம்' அல்லது 'உணர்வு மனம்' என்பது ஒருங்கிணைக்கப்பட்ட பிரக்ஞையாகவும், 'அதியகம்' அல்லது தொலைநோக்கு மனம் என்பது மனதை நன்னெறிப்படுத்தும் காரணியாகச் செயல்படுவதாக பிராய்ட் விளக்கினார். அகம் பிரக்ஞை உணர்வுடன் செயற்படுகின்றது. எ.கா: அகம் 'அது'வின் தூண்டலின் விருப்புக்கு ஏற்ப தேடினாலும், அந்தத் தேடலினால் நிலைத்த மகிழ்ச்சி பெறமுடியாமல் வேதனையே மிஞ்சும் என்ற அதியகம் / தொலை நோக்கு மனம் கொடுக்கும் எச்சரிக்கையையும் மனதில் கொண்டு, அதுவையும் அதியகத்தையும் மத்தியஸ்தம் செய்ய முயல்கிறது எனவும், அது அடிக்கடி நனவிலிக் கட்டளைகளை தொலை நோக்கு மனம் கொடுக்கும் கட்டளைகளால் மூடி கட்டுப்படுத்தும் பணியை அகம் செய்வதாக பிராய்ட் குறிப்பிட்டார்.

English

The self; the part of the mind that mediates between the demands of the body and the realities of the environment, consisting of cognition, perception, defense mechanism, memory, and motor control. In psychodynamic theory, one of the three major spheres of the psyche, along with the id and the superego. The healthy ego finds ways to compromise between these competing pressures and enables the person to cope with the demands of the environment.