ego disintegration

நான் எனும் உணர்வு சிதைதல் / தன்னகங்காரம் சிதைதல், ஈகோ திறன் முறிவு

தமிழ் விளக்கம்

நான் எனும் உணர்வே மனிதர்களை மன அழுத்தத்திலிருந்தும், யாதார்த்தங்களைப் புரிந்துகொள்ளவும், ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளவும், சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. அப்படி உதவ இயலாமல் போகும் நிலையையே ஈகோவின் சிதைவு எனலாம். மேலும் ஆழ்மனம் / நனவிலி (Id) மனமும், மேல்மனமும் வைக்கும் எதிரெதிர்க் கோரிக்கைகளைச் சமன் செய்யும் பொறுப்பு ஈகோவிற்கு உண்டு. அப்படி சமன் செய்ய இயலாமையே ஈகோவின் சிதைவு எனலாம்.
(Id ஆழ்மனம் கரு உயிர்ம இனக்கீற்றில் மரபியல் சிறப்பியல்புகளையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலப்பொருள், தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்துதல் Ego நனவு மனம், சமூக மனம் Superego மேல்மனம், கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்துக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது மேல்மனக் கூறு)

English

1. Breakdown of the ability of the ego to carry out its functions, such as defending against stressors, distinguishing between reality and fantasy, delaying gratification, and mediating between the demands of the body and the environment. 2. In psychoanalytic theory, the ego's loss of ability to continue in its function of mediating between the competing demands of the id and the superego.