ejaculatory inhibition

விந்து வெளியேற்றம் தடைபடுதல், விந்து பீய்ச்சல் தடை, விந்து வடிதல் குறை, விந்து நிரோதம்

தமிழ் விளக்கம்

விந்து தள்ளல் (Ejaculation) எனப்படுவது ஆண்குறியிலிருந்து விந்து வெளித் தள்ளப்படுதலாகும். பொதுவாகப் புணர்ச்சிப் பரவசநிலையில் இது நிகழ்கிறது. பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு ஆரம்பித்த சில நிமிடங்களிலே விந்து வெளியேறிவிடும். புணர்ச்சிப் பரவசநிலை அடையும் முன்னரே சிலருக்கு விந்து வெளியேறிவிடுவதை முன்கூட்டியே விந்து தள்ளல் (premature ejaculation) என்பர். சிலருக்கு மிகத் தாமதமாக விந்து (ejaculatory inhibition) வெளியேறும். சீக்கிரமாகவோ, தாமதமாகவோ விந்து வெளியேறுவது தம்பதிகளுக்கு உடலுறவில் திருப்தியைத் தராது. இதனால் மணவாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றலாம்.

English

A sexual disorder in which a man can become sexually aroused and erect but has difficulty ejaculating intravaginally.