elder abuse
மூத்தோரை இழிவாக நடத்துதல்
தமிழ் விளக்கம்
அடிப்பது, புறக்கணிப்பது, மனக்கஷ்டப்படுத்துவது, ஏமாற்றுவது, போன்ற செயல்கள். முதியோர்களையும், சார்ந்திருப்பவர்களையும் இழிவாக / மோசமாக நடத்துதல். முதியோர்களின் வயது வந்த பிள்ளைகளோ, அவர்களின் உறவினர்களோ, பாதுகாப்பாளர்களோ அல்ல்து பராமரிக்க நியமிக்கப்பட்டவர்களோ முதியோர்களை உடல் ரீதியான சித்திரவதை, புறக்கணித்தல், ஏமாற்றுதல், உளரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது துன்புறுத்தலாகும்.
English
Mistreatment of older people and relatively dependent people. According to Toshio Tatora (“Elder Abuse,” in Richard L. Edwards [Ed.-in-Chief], Encyclopedia of Social Work, 19th ed., Washington, DC: NASW Press, 1995), elder abuse includes physical battering, neglect, exploitation, and psychological harm. Abuse may be inflicted by the older person's adult children or other relatives, legal custodians, or other care providers.