elderly

வயதானவர்கள், பெரும்பாலும் 65 வயதிற்கு மேற்பட்ட வலுவிழந்த, பலவீனமான, நலிவுற்ற முதியவர்களைக் குறிக்கும்

தமிழ் விளக்கம்

முதுமை என்பது மனித வாழ்வின் இறுதிநிலையாகும். கிழவர்கள், மூத்தவர்கள், மூத்த குடிமக்கள், வயதானவர்கள், முதியவர்கள், பெரியவர்கள் என்று பல்வேறாக அழைக்கப்படுகிறார்கள். வயது, வயதாவது என்ற சொற்றொடர் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு கையாளப்படுகிறது. வயதாவது என்பது உயிரியல் நிலையை விட சமூகக் கட்டமைப்பாக இருப்பதை கலாச்சார வேறுபாடுகள் காட்டுகின்றன.
இவர்கள் வயது குறைவானவர்களைவிட நோய்வாய்ப்படும் வாய்ப்பும், அந்நோயிலிருந்து மீண்டெழ குறைவான வாய்ப்பும் கொண்டவர்கள். வயதாவதை உயிரியல் ரீதியாக மூப்படைதல் (senescence) என்றும், மருத்துவ ரீதியாக வயதாவதை அறிந்து கொள்வதை முதுமையியல், மூப்பியல் (gerontology) என்றும், வயதானவர்களுக்கு வரும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதை முதுமை மருத்துவம் (geriatrics) என்றும் கூறுவர். வயதாவதால் ஏற்படும் இயலாமையோடு, பணி ஓய்வு, தனிமை, நடமாட்டமின்மை, வயது சார்ந்த பாகுபாடு போன்றவைகளையும் முதுமைப்பருவத்தில் எதிர்கொள்ள நேருகிறது.

English

Advanced in age. This term is commonly used to designate people older than 65. The term pre-elderly is used for people who have not yet reached age 65. Most social workers prefer the adjective “older” instead of “elderly.” See also frail elderly.