elective surgery

விருப்பத்தின்பேரில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, உம் அழகுக்கான அறுவை சிகிச்சை

தமிழ் விளக்கம்

உயிருக்கு ஆபத்தற்ற நிலையிலோ, அவசரம் கருதியோ, அறுவைச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் இயலாமை ஏற்பட்டுவிடும் என்றில்லாதபோது, தோற்றப்பொழிவைக் கூட்டவும், சில உறுப்புகளின் வனப்பை அதிகரிக்கவும் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதை வடிவமைப்பறுவைச் சிகிச்சை என்றும் கூறுவர். இது நோய் சம்பந்தப்படாத, மருத்துவ ரீதியில் முக்கியமென்று கருதப்படாததால், இச்சிகிச்சைக்கான செலவினங்களை மருத்துவ காப்பீடு மூலம் திரும்ப பெற இயலாது.

English

Surgery considered nonessential because the related condition is not life-threatening, urgent, or physically incapacitating. Patients usually choose to undergo this surgery for psychosocial reasons. Cosmetic surgery to improve an individual's appearance is an example. These medical procedures are often not reimbursable as a third-party payment.