Electronic Funds Management System EFMS

மின்னணுசார் நிதி மேலாண்மைத் திட்டம் / கணினி வழி நிதி மேலாண்மைத் திட்டம்

தமிழ் விளக்கம்

நிறுவனாத்திலிருக்கும் அல்லது வேறொரு நிதி நிறுவனத்திலிருக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை கணனியின் உதவிக்கொண்டு பரிமாறிக்கொள்ளும் நடைமுறையாகும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல நிலைகளில் மத்திய அரசு நிதியிலிருந்து மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு கடைசியில் பாயனாளிகளின் ஊதியமும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றமாகின்றது. ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஊதியப் பட்டுவாடாவில் மாவட்டம், ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் ஏற்படும் குறைகள் மற்றும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க, அரசு மின்னணுசார் நிதி மேலாண்மைத் திட்டத்தினை மேற்கொண்டுள்ளது. இத்திட்டதினால் நிதி ஒருங்கிணைக்கப்பட்டு பரமரிக்கப்படுகிறது. இந்நிதியினை அனைத்து மாவட்ட திட்ட செயலாக்க அலகுகளும் பயன்படுத்தலாம். அனைத்து பரிவர்த்தனைகளும் 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும்.

English

Electronic funds transfer (EFT) is the electronic transfer of money from one bank account to another, either within a single financial institution or across multiple institutions, through computer-based systems and without the direct intervention of bank staff.