Elizabethan Poor Laws

வறியவர்களுக்கான எலிசபெத் அரசியின் சட்டங்கள் 1601

தமிழ் விளக்கம்

ஏழைகளுக்கான நிவாரணச் சட்டம் (43 வது எலிசபெத் சட்டம், எலிசபெத்தின் வறியவர் சட்டம், பழைய வறியவர் சட்டம்) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், எலிசெபெத் அரசியின் ஆட்சியில், 1601 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. ஏழைகளுக்கு உதவுவது என்பது (திருச்சபை) மடாலயங்கள் மற்றும் சமூகப் பொறுப்பாக இருந்த நடைமுறை, மடாலயங்கள் ஷீணமடைந்ததாலும், இடைக்கால சமூகக் கட்டமைப்பு மாறியதாலும், தனியார் செய்துவந்த தருமங்களை அரசே நிலவரி மூலம் ஈடுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுகாறும் வறியவர்களைக் கையாண்ட நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. வேலை செய்ய இயலாத ஏழைகள் (பார்வையற்றவர்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள்) வறியவர் (poor houses) இல்லங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். திடகாத்திரமான ஏழைகள் பணியகங்களுக்கு (work houses) அனுப்பட்டார்கள். வேலை செய்ய முடிந்த ஆனால் சோம்பித்திரிந்த ஏழைகள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அனாதை மற்றும் ஏழைக்குழந்தைகள் பணிபயில்வோராக (apprentice) பிணைப்படுத்தப்பட்டு, வேலைகொட்டடிகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ஏழைகள் (உதவிக்கு) தகுதியான ஏழைகள், தகுதியற்ற ஏழைகள் என்று பிரிக்கப்பட்டு, அவர்களின் தகுதி அடிப்படையில் நிவாரணமோ, உதவியோ, கட்டுப்பாடுகளோ, தண்டனையோ வழங்க இச்சட்டம் வழிவகுத்தது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுக் காலம் இச்சட்டம் அமுலில் இருந்தது.

English

The statutes, codified in England in 1601 during the reign of Queen Elizabeth I, that established many of the principles that are still influential in dealing with economically disadvantaged people. Among their provisions were local rather than national responsibility for the care of poor people, the distinction between the “worthy poor” and the “unworthy poor,” punitive measures for those refusing to work, standards of responsibility for relatives, and the means test to determine need for assistance.