emergency medical technicians (EMTs)
அவசரகால மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளர்கள்
தமிழ் விளக்கம்
நெருக்கடியான (புயல், வெள்ளம், தீ விபத்து, போக்குவரத்து தடை) காலங்களில் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் மூலம் அடிப்படை மருத்துவ உதவி அளிப்பது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையைக் (விபத்தின் போதோ, காயங்கள் ஏற்படும் போதோ) கையாள பயிற்சி பெற்ற பணியாளர்கள். இவர்கள் பெரும்பாலும் மருத்துவ ஊர்தி / உதவுகை ஊர்தி / விபத்துச் சேவையூர்தி, (ambulance) களிலும், தீயணைப்பு துறையிலும், காவல் துறையிலும் பணியாற்றுவார்கள். இந்தப் பணியாளர்களை ஊதியம் பெறுகிறவர்கள், தன்னார்வ சேவகர்கள் என்று இனம் பிரிக்கலாம்.
English
Health care workers who assist the more highly trained paramedics and physicians in administering critical and life-saving treatment.