emotion
மனக்கிளர்ச்சி, மனவெழுச்சி, உணர்ச்சிவேகம், உணர்ச்சிவயப்பட்ட, உணர்ச்சிவசம், மெய்ப்பாடு, உளப்பாடு
தமிழ் விளக்கம்
உள்ளத்தில் தோன்றும் அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதல். உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்பாடு. அதாவது மெய்யில் படுவது. தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகையவை. இந்த மெய்ப்பாடுகள் புறக்கரணங்களாலோ அகக் காரணங்களாலோ ஏற்படலாம். இதையே தொல்காப்பியர் புறத்திணைக்கு உரியவை எனவும், அகத்திணைக்கு உரியவை எனவும் பாகுபடுத்தி விளக்கியுள்ளார்.
மனக் கிளர்ச்சியோடு தொடர்புடைய பிற வார்த்தைகள். மெய்ப்பாட்டுப் பிரச்சினை (emotional problem), மனவெழுச்சிப் பக்குவம் (emotional maturity), மனவெழுச்சிக்குழப்பம் (emotional disorder), மனவெழுச்சி வகை (emotional pattern), உணர்ச்சிப் பயிற்சி (emotional training), 1. உணர்ச்சி ஊக்கம் 2. உணர்ச்சிமீதான துன்பம் (emotional strain), நிலையா உணர்ச்சிவசியம் (emotional lability), உணர்ச்சிப் பணிப்பு (emotional band), மனவெழுச்சிக் காரணி (emotional factor)

English
1. A feeling, mood, or affect. 2. A state of mind usually accompanied by concurrent physiological and behavioral changes and based on the perception of some internal or external object.