emotional divorce
தம்பதிகள் உணர்வு பூர்வமாக ஒதுங்கியிருப்பது, உணர்வு பூர்வ விவாகரத்து
தமிழ் விளக்கம்
இரட்டையர், குறிப்பாக மணமான தம்பதியினர், அவர்களுக்குள் பரஸ்பரம் அனுபவித்த வலி, மனவுளைச்சல், கோபம் அல்லது பிற முரண்பாடுகளால் ஒருவருக்கொருவர் விலகி இருக்கும் நிலை. இவர்கள் பெரும்பாலும் உடனிருப்பதை, சில விசயங்களைப் பேசுவதை, ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்வதைத் தவிர்த்து ஒதுங்கி இருப்பர்.
English
A distancing between members of a dyad, usually a married couple, because they have experienced considerable pain, anxiety, anger, or other similar reactions in their previous encounters. Typically, the resulting behavior includes avoidance of one another's physical presence, avoidance of discussions about certain emotionally charged events, or refusal to provide needed emotional support.