emotional intelligence

உணர்வுசார் நுண்ணறிவு

தமிழ் விளக்கம்

ஒருவர் தமது உணர்வுகளையும், மற்றவர்கள் / குழுக்களின் உணர்வுகளையும் அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து அதைத் திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றலே உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. உணர்வுசார் நுண்ணறிவு கொண்டவர்கள் தமது உணர்ச்சிகளை அடையாளம் கண்டு கொள்வதோடு அவற்றின் சரியான அர்த்தத்தையும் அவை எவ்வாறு மற்ற மனிதர்களைப் பாதிக்கும் என்பதையும் அறிந்துவைத்திருப்பார்கள். அமெரிக்க உளவியலாளரான டேனியல் கோல்ட்மன் என்பவர்தான் உணர்வுசார் நுண்ணறிவினை பிரபலப்படுத்தியவர் என்று அறியப்படுகிறார். டேனியல் கோல்மெனின் கூற்றுப்படி உணர்வுசார் நுண்ணறிவின் கூறுகள் பின்வருமாறு:
1) ஒருவர் தனது உணர்வுநிலையை துல்லியமாக அறிதல் (சுய விழிப்புணர்வு)
2) ஒருவர் தன்னுடைய உணர்வுநிலையை திறம்பட மேலாண்மை செய்தல் (சுய கட்டுப்பாடு)
3) ஒருவர் தம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொள்ளுதல் (ஊக்கம்)
4) இன்னொருவருடைய உணர்வுநிலையை புரிந்து கொண்டு அங்கீகரித்தல் (மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளல்)
5) இன்னொருவருடனான உறவை சுமுகமாகப் பேணுதல்
மானுடச் செயல்பாட்டை மனிதன் பல வழிகளில் புரிந்துகொள்கிறான். சிலர் பார்வையினூடாக அதிக தகவல்களை உள்வாங்கிக் கொள்வர். சிலர் கேள்வியினூடாக அதிக தகவல்களை உள்வாங்கிக் கொள்வர். சிலர் உணர்வதனூடாக அதிக தகவல்களைப் பெறுகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்கள் உணர்வதினூடாக அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள சமூகப்பணியாளர்களுக்கு உணர்வுசார் நுண்ணறிவு மிகவும் முக்கியமானதாகும். தான் அழுத்தத்திற்கு உட்படும் போது தனது வாடிக்கையாளருடன் கோபம்கொண்டு நடந்துகொள்ள்ளக்கூடாது. ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளருடன் எதிர்மறை உணர்வு இட மாற்றீடுக்கு இடம் தரலாகாது.
பார்க்க: Transference என்றால் வாடிக்கையாளர் தன்னுடைய ஆழ்மன உணர்வுகளை சமூகப் பணியாளரிடம் (உளப்பிணி மருத்துவர்) பகிர்ந்துகொள்ளல். இந்த ஆழ்மனப் பகிர்வு சமூகப் பணியாளர் மீதான கவர்ச்சியாகவோ, சிற்றின்ப இச்சையாகவோ, கோபம், ஆத்திரமாகவோ, அவநம்பிக்கையாகவோ, பெற்றோர் சகோதர நிலை சார்ந்ததாகவோ, அல்லது குரு நிலை கொண்டதாகவோ இருக்கலாம். சமூகப் பணியாளரை சமூகப்பணியாளராகப் பார்க்காமல் வேறுவிதமாகப் பார்ப்பது சிகிச்சையின் பலனைக் குறைக்கலாம் / தடங்கல் ஏற்படுத்தலாம். counter transference என்பது சமூகப் பணியாளரே தன் ஆழ்மன உணர்வுகளின் அடிப்படையில், சுய உணர்வுடனோ, சுய உணர்வின்றியோ வாடிக்கையாளரை பெற்றோர் சகோதர நிலை சார்ந்தோ, தன்னுடைய மதிப்பீடுகளின் படி வாடிக்கையாளர் மீது கோபம், ஆத்திரம் கொண்டோ, சிற்றின்ப நாட்டம் கொண்டோ வாடிக்கையாளரைப் பார்ப்பது. உளஇயக்கக் கோட்பாட்டின்படி சமூகப் பணியாளரின் வளர்ச்சிப் பருவ அனுபவ முரண்பாடுகளின் அடிப்படையில் இது அமையலாம். சமூகப்பணியாளர், தனது உணர்வுகளை நுட்பமாக உணர்ந்து புரிந்து கொள்ளாவிட்டால் அவர் அளிக்கும் சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தரவியலாது போகலாம்.

English

Emotional intelligence (EI) or emotional quotient (EQ) is the capability of individuals to recognize their own, and other people's emotions, to discriminate between different feelings and label them appropriately, to use emotional information to guide thinking and behavior, and to manage and/or adjust emotions to adapt environments or achieve one's goal(s). This term gained popularity in the 1995 book by that title, written by the author, psychologist, and science journalist Daniel Goleman.