empathy

ஒத்துணர்வு, இணைத்துயர்மை, உணர்ச்சி இயைதல், மாற்றார் உணர்வறிதல், மற்றவர் உளமறிந்து செயல்படல், உணர்திறன்

தமிழ் விளக்கம்

ஒத்த உணர்வு கொண்டு, மாற்றார் உணர்வறிந்து, இணைத் துயர்மை கொள்ளும் மனப்பாங்கு. இது பல்பொருள் தரும் வார்த்தை. இது மற்றவர்கள் மீதான கரிசனம், உதவி செய்யும் விருப்புடமை, பிறரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் குறிப்பாலறிதல், தனக்கும் பிறருக்குமான வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமை, பிறரிடம் கனிவு காட்டுதல் போன்ற பல அர்த்தங்களில் உபயோகப்படுகின்றது. பரிவு, இரக்கம் (compassion), அனுதாபம் (sympathy) ஆகிய வார்த்தைகளும் இதற்கினையான வார்த்தைகளாக உபயோகப்படுத்தப்பட்டாலும், அதற்கிடையே வேறுபாடுகளும் உண்டு. பரிவு இரக்கம் என்பது வசதியற்றவர்களிடமும், உதவி தேவைப்படுபவர்களிடமும் ஏற்படுவது. அனுதாபம் என்பது வசதியற்றவர்களை, இல்லாதவர்களை, வசதிய்ள்ளவார்கள் கரிசனத்துடன் புரிந்துகொள்வது.

English

The act of perceiving, understanding, experiencing, and responding to the emotional state and ideas of another person.