Employment and Training Administration

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான நிர்வாகம்

தமிழ் விளக்கம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான நிர்வாகம் அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கி வரும் நிறுவனமாகும். வேலைவாய்ப்பை அதிகரிக்கத் திட்டமிடல், வேலையாற்றோருக்கு வேலை கிடைக்க உதவுதல், தொழில் மற்றும் பணியிடைப் பயிற்சிகளுக்கான வாய்ப்பையும் தரத்தையும் மேம்படுத்துதல், அதிகப் பணியாளர்களை வேலையிலமர்த்த முதலாளிகளை ஊக்குவித்தல் போன்ற பொறுப்புகளைச் செய்து வருகின்றது. இந்நிறுவனம் வேலைவாய்ப்பு சேவை, வேலையின்மைக் காப்பீட்டு சேவை, தொழில் பயிலுநர் பயிற்சி பிரிவு, வேலை ஊக்கத்தொகை திட்டம் என்று அமைப்புகளை உள்ளடக்கியது.

English

A branch of the U.S. Department of Labor that focuses on programs to increase employment, help unemployed workers, facilitate access to jobs, enhance the quality and opportunity for vocational and on-the-job training, and encourage employers to hire workers. It includes the U.S. Employment Service, the Unemployment Insurance Service, the Bureau of Apprenticeship and Training, and the Work Incentive (WIN) program.