employment policy
வேலை வாய்ப்புக் கொள்கை
தமிழ் விளக்கம்
தொழிலாளர்களைப் பணியிலமர்த்தும் போதோ அல்லது பணிநீக்கம் செய்யும் போதோ கடைப்பிடிக்கவேண்டிய முறைகள், பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய ஊதியம் மற்றும் சலுகைகள், பலவகையான பணிப் பாதுகாப்பு முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கத் தேவையான பொருளாதாரக் கொள்கைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வடிவமைக்கப்பட்ட அரசுக்கொள்கைகள். இந்தக் கொள்கைகளை வகுக்க அமெரிக்க அரசின் தொழிலாளர் நலத்துறை, பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான (Occupational Safety and Health Administrators (OSHA) நிர்வாகக் குழு, தேசிய வேலைவாய்ப்புக் கொள்கைக்கான ஆணையம் (National Commission for Employment Policy), தேசியத் தொழில் தகவல் ஒருங்கிணைப்பு குழு (National Occupational Information Coordinating Committee), ஊனமுற்றோர் வேலைவாய்ப்பிற்கான ஜனாதிபதிக்குழு (President's Committee on Employment of People with Disabilities) போன்ற நிறுவனங்களைத் தோற்றுவித்துள்ளது.
English
The principles, guidelines, goals, and regulations pertaining to the way a nation or an organization deals with its actual and potential work force. Aspects of an employment policy include hiring and firing rules and procedures, salary and benefits structure, occupational safety and health provisions, and economic programs to stimulate the creation of more jobs. In the United States, organizations affiliated with the U.S. Department of Labor that shape employment policy include the Occupational Safety and Health Administrators (OSHA), the National Commission for Employment Policy, the National Occupational Information Coordinating Committee, and the President's Committee on Employment of People with Disabilities.