empty nest
காலிப் பஞ்சாரம், காலி குஞ்சுறை, வெற்றுக் கூடு, காலியான கூண்டு
தமிழ் விளக்கம்
குழந்தைகள் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழத் தலைப்பட பெற்றோர்கள் மட்டும் வாழும் வீடு - குழந்தைகள் பெரியவர்களாகி மேற்படிப்பிற்கோ, தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ வீட்டை விட்டு வெளியேறுதல். இது இயல்பானதென்றாலும், தனித்து விடப்பட்ட பெற்றோர்கள் தனிமையை, வாழ்வின் நோக்கத்தை, மன அழுத்தத்தை அனுபவிக்க நேரும். குறிப்பாகக் காலிப் பஞ்சார நிலை முழு நேரக் குடும்பத் தலைவியாய் இருப்பவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை தரும்.
English
A term applied to the nuclear family after the children have matured and left the home.