encephalitis

மூளை அழற்சி நோய், ஜப்பான் மூளைக்காய்ச்சல், மூளைக் காய்ச்சல், மூளை வீக்க நோய், மூளையழற்சி

தமிழ் விளக்கம்

மூளைச்சவ்வுக் காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் (Brain fever) என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகளின் வீக்கமாகும். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய்க் காரணிகளினால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். மூளைக்காய்ச்சல் பொதுவாக இரு வகைப்படும். அவை: 1. என்செபாலைட்டிஸ் (Encephalitis), 2. மேனிஞ்சைட்டிஸ் (Meningitis) ஆகும். என்செபாலைட்டிஸ் என்பது மக்கள் வழக்கில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனப்படுகிறது. 'க்யூலக்ஸ்' என்ற ஜப்பானிய வைரஸ், இந்நோயை உருவாக்குகிறது. வாத்து, கொக்கு, நாரை போன்ற பறவைகளிடம் உள்ள இந்த வைரசை மனிதனுக்கு பரப்பும் வேலையைக் கொசுக்கள் செய்து விடுகின்றன. இந்த வைரஸ்கள் பன்றியின் ரத்தத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டவை. இந்நோய் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தாக்குகிறது. திடீர் காய்ச்சல், முதுகு வலி, போன்றவை இதன் அறிகுறிகள். சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

English

Inflammation of the brain or its covering. Usually this is an acute condition but may lead to personality or organic changes that continue after the inflammation.