encounter group

சந்திப்புக் குழுக்கள்

தமிழ் விளக்கம்

இது ஒரு குறுகிய கால குழுவை மையமாகக் கொண்ட உளவியல் சிகிச்சை முறை. இதை T. Group (பயிற்சி குழு) உணர்திறன் பயிற்சிக் குழு, மனித உறவுகள் பயிற்சிக் குழு அல்லது என்கவுண்டர் குழு (sensitivity-training group, human relations training group or encounter group) என்றும் அழைக்கின்றார்கள். 8 முதல் 15 பேர் அடங்கிய சிறு குழு சுதந்திரமான சூழலில் தங்கள் உணர்ச்சிகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதன் மூலம், அவர்களின் உணர்திறன், பரஸ்பர அக்கறை, மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய தளங்களில் திட்டமிடப்பட்ட (கட்டமைக்கப்பட்ட) குழு செயல்முறைகள் மூலம் அதிகரித்துக் கொள்கின்றனர்.

English

Intense, short-term group therapy—using principles and techniques that include gestalt therapy, group psychotherapy, and humanistic orientation principles and techniques—designed to promote the personal growth of the participants. The emphasis is not on correcting disorders, but rather on increasing the emotional and sensory aspects of being and on increasing open communication and self-awareness.