entrepreneurial practice
தொழில் முனைவோர் முயற்சி
தமிழ் விளக்கம்
தொழில் முனைவோர் (Entrepreneur) என்பவர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதில் வரக்கூடிய சிக்கல்களுக்கு தன்னுடைய முயற்சி மற்றும் யோசனையைக் கொண்டு செயல்படும் பொறுப்புடையவர். ஒரு தலைவராக இருந்து நிலம், தொழிலாளி, மற்றும் முதலீடு ஆகியவற்றை இணைத்துச் சந்தையில் புதிய பொருட்கள் அல்லது சேவைகளைத் தொடர்ந்து உருவாக்குகிறார். ஆங்கிலத்தில் தொழில் முனைவோர் என்ற பதமானது யார் ஒருவர் துணிகர முயற்சியின் மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் பொறுப்பானவரோ அவரே தொழில் முனைவோர் என்று குறிக்கிறது.
சமூகப்பணியில் தொழில்முனைவோர் என்பவர் சமூகத் தொழில் முனைவோரைக் குறிக்கும். சமூகத்திற்கான சேவைகளை இலாப நோக்கோடோ அல்லது தனது சமூக அந்தஸ்தையோ, பொருளாதாரத்தையோ உயர்த்திக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர். அவருடைய முக்கியமான குறிக்கோள் சமூகத்திற்கு நல்ல சேவைகளை வழங்கி சமூகத்தை மேம்படுத்துவதும், அதிக லாப நோக்கமில்லாத திட்டங்களைச் செயல்படுத்துவதும் ஆகும். 'சமூகத் தொழில் முனைவோர்கள் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றுகிறார்கள். கடினமான சமுதாயப் பிரச்சினைகளுக்கு இவர்கள் அறிவுப்பூர்வமான தீர்வுகளைத் தங்களுடைய முயற்சியின் அடிப்படையில் காண்கிறார்கள்' என்று சஹ்ரா எட் அல் (2009:519) கூறுகிறார். பிணிசார் சமூகப்பணியாளர்களும், தங்கள் நிபுணத்துவத்திற்கு ஆலோசனைக் கட்டணம் பெறுபவர்களும், குழந்தைப் பராமரிப்பு, முதியோர் இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள் நடத்துபவரும், பல்வேறு பயிற்சிகளை நடத்துபவர் போன்றவர்கள் சமூகத் தொழில்முனைவோர் எனப்படுகின்றனர்.

English
In social work, the activities involved in the provision of human services and social services for profit. Such activities include private clinical social work, providing consultations to social agencies and community organizations for fees, and establishing for-profit social services facilities such as private schools for disturbed children, employment agencies for unemployed social workers, training facilities for business organizations, and homes for at-risk population groups such as the frail elderly, unwed mothers-to-be, and children requiring foster care.