environment

சூழல், சுற்றுச் சூழல், சுற்றுப்புற நிலை, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் உயிர்வாழவும், செயல்படவும் சுற்றியிருக்கும் நிலைமைகள்

தமிழ் விளக்கம்

உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும், அதன் வளர்ச்சிக்கும், அதன் விருத்திக்கும் காரணமான வெளிப்புறச் சூழல். சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகப் பொருளாதாரச் சூழல் போன்ற சொற்பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கைச் சுற்று சூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்.
வாழ்சூழலியலில் (ecology), வாழிடம் (habitat) என்பது குறிப்பிட்ட உயிர் இனம் (species) வாழ்ந்து வளர்கின்ற இடத்தைக் குறிக்கும். இது ஒரு இனக் கூட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள சூழலைக் குறிக்கும். ஒரு தனி உயிரினம் வாழும் இடத்தையன்றி, ஒரு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் கூட்டமாக வாழ்ந்து பெருகும் ஒரு புவியியல் பிரதேசத்தையே வாழிடம் என்ற சொல் குறிக்கிறது.
சுற்றுச் சூழலோடு சம்பந்தப்பட்ட மற்ற கருத்தாக்கங்கள் - உயிரினப் பன்முகம் (Biodiversity), உயிரினத் தொகுதி (Biome), சூழ்நிலை மண்டலம் (Ecosystem), அழிவின் விளிம்பு (Hotspot), மரபினப் பன்முகம் (genetic diversity), நேர்ச்சிப் புகை சுவாசம் (Passive smoking), உயிரியத் தேக்கம் (Bio-accumulation), உயிரியப் பெருக்கம் (Biomagnification), வாழ்சூழலியல் (Ecology), சூழ்நிலை மண்டலம் (Ecosystem), வாழிடப் பாதுகாப்பு (Habitat conservation), மனித வாழிடம் (Human habitat), இயற்கைச் சூழல் (Natural environment).

English

All the influences, conditions, and natural surroundings that affect the growth and development of living things.