environmental modification
சூழ்நிலையை மாற்றியமைத்தல், சூழ்நிலையைத் திருத்தியமைத்தல்
தமிழ் விளக்கம்
சமூகத் தனியாளர் பணியில் சமூகப் பணியாளர்கள் கடைப்பிடிக்கும் சிகிச்சை முறை. தன்னுடைய வாடிக்கையாளரை மற்றவர்கள் புரிந்துகொண்டு பரிவுடன் நடக்க, வாடிக்கையாளர் சார்பில் மத்தியஸ்தம் செய்ய, வாடிக்கையாளருக்கு ஏதுவான உதவிகளை அடையாளம் காட்ட எடுக்கும் முயற்சிகள் மூலம் வாடிக்கையாளருக்கும் அவரின் சுற்றுச் சூழலுக்கும் இணக்கமான நல்லுறைவை ஏற்படுத்திப் பிரச்சனை தீர்க்கும் முறை.
English
See environmental treatment.