envy

பொறாமைகொள்ளல், அழுக்காறு, மற்றவர் செல்வம் அல்லது வெற்றியைக் கண்டு எரிச்சலடைதல்

தமிழ் விளக்கம்

தான் விரும்பியது தன்னிடம் இல்லாமல் மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் எரிச்சல் மனோபாவம். பொறாமை (பொறாமைக் குணம்) என்பதை, 'ஒரு நபர் மற்றவரின் (அறியக்கூடிய) மிகச்சிறந்த நடத்தை, சாதனை அல்லது உடைமை ஆகியவற்றைப் பெறமுடியாமல் போகும் போதும் மற்றும் அதைப் பெற விரும்பும் போதும் அல்லது மற்றொருவர் அதைப் பெறக்கூடாது என விரும்பும் போதும் நிகழும்' ஒரு வித உணர்ச்சியாக வரையறுக்கலாம். 'பொறாமை என்பது தாழ்வு உணர்விலிருந்தும் வந்திருக்கலாம், அதன் விளைவு அதிகப்படியான சமூக ஒப்பீடு. இது தனிநபரின் சுய உருவத்தை அச்சுறுத்துலுக்கு உள்ளாக்குகிறது. பொறாமை மகிழ்ச்சியின்மையின் முக்கியக் காரணங்களில் ஒன்று என்று பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் கூறினார். பொறாமையென்பது மனித இயல்பின் உலகளாவிய மற்றும் மிகுந்த துரதிர்ஷ்டவசமான நோக்கு ஆகும். ஏனெனில் பொறாமை படைத்த நபர் தனது பொறாமையால் தானும் மகிழ்ச்சியை இழந்து, பிறருக்கும் இடர்யூறுகளை ஏற்படுத்துகிறார்.

English

A group of uncomfortable emotions pertaining to the wish to have something that others possess. See also jealousy.