EPA
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்
தமிழ் விளக்கம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலைத் தனிமனிதனோ, அமைப்போ அல்லது அரசாங்கமோ இயற்கைச் சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள் தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. 1960 களிலிருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகள் மூலமாக பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்வேறு மனித நடவடிக்கைகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. கழிவு உற்பத்தி, காற்று சூழல் மாசடைதல், மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளாகும்.
சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப் பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்தக் காரணிகளில் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச்சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச்சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன. உண்மையான சுற்றுசுழல் பாதுகாப்புக் கிடைக்க சமுதாயம் ஒன்றுபட்டு சுற்றுச்சூழலைப் பற்றிய முடிவுகளை எடுப்பது அவசியமாகின்றது.
1984 இல், இந்தியாவில் சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்கு சில சட்டங்களே இருந்தன. மேலும் அச் ட்டங்களின் அமலாக்கம் அரிதாகவே இருந்தது. சூழலை (காற்று, நிலம், நீர்) எந்தத் தொழில் நிறுவனமும் மாசுப்படுத்தும் நிலைமை இருந்தது. காற்று மாசுபாடு காரணமாக நோய்கள் வேகமாகப் பரவி வந்தன. விலங்குகள், தண்ணீரில் வெளிவந்த நச்சு பொருட்கள் காரணமாக இறந்தன. புதிய சட்டங்கள் வந்த பிறகு வேகமாகப் பரவி வந்த நோய்கள் குறைந்து, இந்தப் பகுதிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டது. நிலச் சரிவுகள், பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சூழலைப் பாதிக்கும் பேரழிவுகளும் பல உள்ளன. ஒரு இடம் ஏதாவதொரு கட்டிடம் அல்லது கட்டுமானத்திற்கு ஏற்றதா என்பதைச் சரிபார்க்க இடர்ப்பாடு வரைபடம் (Hazard Mapping) செய்யப்படுகிறது. நிலச்சரிவைத் தடுக்க, தக்கவைப்புக் கட்டுமானச் சுவர்கள் மற்றும் பல நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்க்கொள்ளப்பட்டது.
சூழல் தூய்மை மற்றும் சுகாதாரம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை உரிமையாகும் என்று அரசுசாசனம் எண் 22 குறிப்பிடுகின்றது. ஒரு நபர் வாழும் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுள்ளது என்று கருதும் பட்சம், அரசுசாசன எண் 22 படி வாழ்க்கை உரிமையைக் காக்க அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்.

English
See Environmental Protection Agency (EPA).