epidemic
கொள்ளைநோய், தொத்துநோய், விரைவாய்ப் பரவக்கூடியது, நோய்வகையில் ஒரே சமயத்தில் ஓரிடத்திலுள்ள பெருவாரியான மக்களிடையே பரவியுள்ள நோய்.
தமிழ் விளக்கம்
கொள்ளைநோய் (Epidemic) என்பது ஒரு குறிப்பிட்ட நோயானது, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட மக்களிடத்தில், புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், சராசரியாகப் பாதிப்பபதை / பரவுவதைவிட அளவுமீறி பாதிக்கும் / பரவும் நிலையாகும். அந்த நோயானது திடீரெனப் பரவ ஆரம்பித்து, மிக விரைவாக மக்களிடம் பரவும். குறிப்பிட்ட நோயின், நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய அளவில் மக்களைத் தாக்கும்போது, அது உலகம் பரவும்நோய் (pandemic) என அழைக்கப்படும். ஒரு நோய் மக்களிடையே பரவும் அடிப்படை அளவைவிட அதிகரிக்கும்போது அது கொள்ளை நோயாக அறிவிக்கப்படும். தடிமன் (சளி) போன்ற பொதுவான நோய்கள் இவ்வாறு அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.
ஒரு நோய் விரைவாகப் பரவுவதற்கான காரணங்கள் பல 1. நோய்க்காரணியின் வீரியம் அதிகரித்தல் 2. நோய் பரவுவதற்கேற்ப சுற்றுச் சூழல் இருத்தல் 3. தொற்றுக் கிருமிகள் பாதிக்குமளவு நோயை ஏற்கும் உயிரினங்களில் நோயெதிர்ப்பு குறைதல். எல்லாத் தொற்று நோய்களும் கொள்ளை நோயாக மாறுவதில்லை. இந்தக்கருத்தின் அடிப்படியிலே சமீப காலத்தில் உடற் பருமன் கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டது.

English
The occurrence of a disease, disorder, or social problem that spreads rapidly and affects many people in a community within a relatively short period. See also disease patterns.