Equal Employment Opportunity Commission (EEOC)

சம வேலை வாய்ப்பிற்கான ஆணையம்

தமிழ் விளக்கம்

சம வேலைவாய்ப்பிற்கான ஆணையமென்பது பணியிடப் பாகுபாடுகளை அகற்றக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனம். இந்த நிறுவனம் இனம், நிறம், பூர்வீகம், மதம், வயது, இயலாமை, பாலினம், மரபணுக் கூறுகளை காரணம் காட்டி செய்யப்படும் பாகுபாடுகள் பற்றி செய்யப்படும் புகார்கள் பற்றி விசாரிக்க அதிகாரம் கொண்டது. பாகுபாடு பற்றி புகார் செய்பவர்கள், அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களின் மீது பழிவாங்கும் நடத்தைகள் பற்றிய புகார்களையும் இந்நிறுவனம் விசாரிக்கும். ஓரினச் சேர்க்கையாளர், தன்பாலினச் சேர்க்கையாளர், இருபால் இச்சையாளர் மீது காட்டப்படும் பாகுபாட்டையும், திருநங்கைகளின் பாலின அடையாளத்தை அங்கீகரித்தும் இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பாகுபாடு பற்றிய ஆயிரக்கணக்கான புகார்களை மத்தியஸ்தம் செய்து வைத்து, பிரச்சனைகளை இந்நிறுவனம் சுமுகமாகக் கையாண்டுள்ளது. பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்குத் தொடரவும், இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது

English

The five-member federal panel that administers Title VII of the Civil Rights Act of 1964, prohibiting discrimination by employers, labor unions, or employment agencies and striving to promote fair practices in the workplace.