equality

சமத்துவம், சமதை, சமானம், ஒப்புணர்ச்சி, சமநிலை, சரி நிலை, ஒப்பு, சமன்மை

தமிழ் விளக்கம்

சமத்துவம் என்ற சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள் தரும் ஒரு பொதுச் சொல். அடிப்படையில் சமத்துவம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் அல்லது மனிதர்களுக்கு இடையே சில குறிப்பிட்ட நிலைகளில் காணப்படும் சம நிலையைக் குறிக்கின்றது. சமத்துவம் எந்த கருத்துச் சூழலில் வழங்குகிறது என்பதைப் பொறுத்து பின்வருமாறு வகைப்படுத்தலாம். சமத்துவ சமூகம் - அனைத்து மனிதர்களும் சமமானவர்கள், சமத்துவ வாய்ப்பு, சமத்துவப் பொருளாதார நிலை, சமத்துவ விளைவு, சமத்துவப் பாலின நிலை, சமத்துவச் சட்டங்கள். சமூகப்பணியில் சமத்துவம் எனப்படுவது எல்லா மனிதர்களுக்கும், சமூக, கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சமமான சேவைகள், ஆதாரங்கள் (உதவிகள்), வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.

English

The principle that individuals should have equal access to services, resources, and opportunities and be treated the same by all social, educational, and welfare institutions; a fundamental social work value.