EST
மின் அதிர்ச்சி சிகிச்சை
தமிழ் விளக்கம்
மின்தூண்டல் சிகிச்சை (மின் அதிர்ச்சி சிகிச்சை) என்பது மின்பட்டைகளைக் கொண்டு, மூளையில் அதிர்வு உண்டாக்கி அதன்மூலம் வலிப்பை வரவழைத்து மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் முறை. மின் அதிர்வு சிகிச்சையினால், தேவையற்ற, கெட்ட நினைவுகளை அழித்து, மன அதிர்ச்சி, மன நோய், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நோயின் தன்மை பொறுத்து நோயாளிக்குப் பலமுறை மின்தூண்டல் அளிக்க வேண்டி வரலாம். இந்தச் சிகிச்சை முறை இத்தாலிய உளநரம்பியல் மருத்துவார்களான யுகோ செலெட்டி மற்றும் லூசியோ பினி என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. உளப்பிணிக்கு நல்ல பலனளிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், தற்போது மின் அதிர்ச்சி சிகிச்சையை ஒரு சில மனக் கோளாறுகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.
English
1. See electroshock therapy (EST). 2. The initials are also used, often not capitalized, for the psychoeducational group experience founded by Werner Erhardt and originally called Erhardt Seminar Training.