ET programs

வேலைப் பயிற்சித் (வாய்ப்புத்) திட்டங்கள்

தமிழ் விளக்கம்

சமூகநலத் திட்டப் பயனாளிகள், அதைச் சார்ந்திருப்பதை விட்டு, பொருளாதாரச் சுதந்திரம் பெற உதவுமுகமாக, சந்தைப்படுத்தக்கூடிய வேலைத்திறன்களை கற்றுக்கொள்ள பயிற்சியளித்து, அவர்களை வேலைக்குத் தகுதியாக்கும் பல்வேறு பயிற்சிகள் அமெக்காவிலுள்ள பல மாநிலங்கள் செய்துவருகின்றன. இந்த மாதிரி வேலைவாய்ப்புப் பயிற்சிபெரும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, மருத்துவ வசதியும் பகல்நேரக் காப்பக வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

English

Employment training programs, used in many states to help recipients of public assistance become economically independent by training them to get and keep jobs and to help them learn marketable skills. In most states in which ET programs exist, the children of the recipients are provided with health care and day care services while the parent is in the training program. See also GAIN programs.