ethical conduct
ஒழுக்க நடத்தை
தமிழ் விளக்கம்
ஒரு சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தார்மீக ஒழுகலாறுகளைப் பின்பற்றி நடத்தல். சமூகப்பணியாளர்களைப் பொருத்தமட்டில் தொழில்முறை சார்ந்த நடத்தை நெறிகளைப் பின்பற்றுதல். உதவி தேடி தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு, திறமையான உயர் தரத்திலான சேவை வழங்குவது, சக பணியாளர்கள், பிற தொழில்முறை சகாக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் மக்கள் என்று அனைவரிடமும் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்வது போன்ற நடத்தைகள்.
English
Behavior that meets a community's positive moral standards—distinguishing right from wrong and adhering to the right. For professional social workers ethical conduct is also following the profession's code of ethics, providing the highest and most skillful level of service to clients as possible and relating to colleagues, other professionals, all people, and society in an honorable manner.